நுங்கு சாப்பிட்டா... இப்படித் தாங்க மீடியாவுக்கு பயந்து ஓடனும்..! சித்த மருத்துவ பெண் சிகாமணி..
Published : Jan 24, 2023 9:32 PM
நுங்கு சாப்பிட்டா... இப்படித் தாங்க மீடியாவுக்கு பயந்து ஓடனும்..! சித்த மருத்துவ பெண் சிகாமணி..
Jan 24, 2023 9:32 PM
பெண்கள் நுங்கு சாப்பிடுவதற்கு புதுமையான விளக்கம் கொடுத்து வில்லங்கத்தில் சிக்கிய சித்தமருத்துவர் ஷர்மிகா, சித்தமருத்துவ கவுன்சிலில் ஆஜரானபின்னர் மீடியாக்களுக்கு பயந்து மரத்தை சுற்றி வாய்திறக்காமல் எஸ்கேப்பான சம்பவம்..
பனை நுங்கு சாப்பிடுவதன் மூலம் பெண்களின் முன்னழகு பெரிதாகும்..., பெண்கள் குப்புறப்படுத்தால் மார்பக புற்று நோய் வரும்..., இப்படி எத்தனையோ அபூர்வ தகவல்களை சித்தமருத்துவம் என்று அளந்து விட்ட மருத்துவர் சர்மிகா என்பவரை சித்த மருத்துவ கவுன்சில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
அதன்படி செவ்வாய்கிழமை அரும்பாக்கத்தில் உள்ள சித்தமருத்துவ கவுன்சில் முன்பு சித்தமருத்துவர் சர்மிகா விசாரணைக்கு ஆஜரானார்
விசாரணைக்கு ஆஜராக செல்லும் போது, விசாரணைக்கு டைம் ஆகுதுன்னு ஏதோ தியேட்டரில் எப்.டி.எப்.எஸ் சுக்கு செல்வது போல கூலாக சிரித்துக் கொண்டே சென்றார்.
சித்த மருத்துவ கவுன்சிலில், 2 வழக்கறிஞர் துணையுடன் ஆஜரான சர்மிகாவிடம், பேட்டி என்ற பெயரில் மார்பக புற்று நோய். நுங்கு ரகசியம், குழந்தை பிறப்பு குறித்து அவர் தெரிவித்திருந்த வினோத தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பபட்டது.
அனைத்துக்கும் சமாளிப்பு பதில்களால் நெளிந்த சர்மிகா தான் எழுத்து பூர்வமாக விளக்கம் அளிப்பதாக கூறி உள்ளார்.
பிப்ரவரி 10 ந்தேதி வரை விளக்கம் அளிக்க கால அவகாசம் கொடுத்து அவரை அனுப்பி வைத்தனர்.
ஏதோ ஆபீஸ் ரூமில் அடி வாங்கி வருவது போல மவுனமாக வெளியே வந்த சர்மிகாவிடம்.மீடியாக்கள் மைக் நீட்ட, அடிச்சு கேப்பாய்ங்க அப்பவும் சொல்லிராதீக என்ற மைண்ட் வாய்ஸில் நடையும் ஓட்டமுமாக சென்றார் சர்மீகா
கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடி மாதிரி அவர் நிக்கிற இடமெல்லாம் மைக்க கண்டதும் மாமா மர்கயா.. என்று போக்கு காட்டி இரு சக்கர வாகனம் ஒன்றில் ஏறி .. ஓடிட்டேன்ல என்ற புன்னகையுடன் கையை உயர்த்திக் காட்டி எஸ்கேப்பானார்
சித்தமருத்துவ கவுண்சில் தலைவர் கூறும் போது, அவர் மீதான புகார்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்து மூலமாக பதில் அளிப்பதாக கூறிச்சென்றதாக தெரிவித்தார்.
இதற்க்கிடையே சித்த மருத்துவர் சர்மிகாவுக்கு ஆதரவாக, குறுக்கே வந்த கவுசிக் போல சித்தமருத்துவர் சங்க பொதுசெயலாளர் செந்தமிழ் செல்வன் பேச ஆரம்பித்தார்.
தமிழகத்தில் சித்தமருத்துவ படிப்பிற்கு ஜனாதிபதி ஒப்புதலே அளிக்கவில்லை என்றும் அப்படி இருக்க எப்படி விசாரணைக்கு அழைக்கலாம் என்றும் ரமணா விஜயகாந்த் போல கொதிக்க, அப்படீன்னா நீங்க எல்லாம் போலி மருத்துவர்களா ? என்றதும் அவர் சமாளிக்கும் விதமாக பதில் அளித்தார்.